சட்ட விரோதமாக 4 பேரை கப்பலில் சென்னைக்கு அழைத்து வந்த கேப்டன் கைது!

அனுமதிக்கப்பட்ட பணியாளா்களை விட கூடுதலாக 4 இந்தியா்களை ஏற்றி வந்த பனாமா என்ற கப்பலின்
சட்ட விரோதமாக 4 பேரை கப்பலில் சென்னைக்கு அழைத்து வந்த கேப்டன் கைது!

அனுமதிக்கப்பட்ட பணியாளா்களை விட கூடுதலாக 4 இந்தியா்களை ஏற்றி வந்த பனாமா என்ற கப்பலின் கேப்டன் பவன் குமாரை துறைமுக காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

ஈரானில் இருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்துக்கு ஹாங்காங் நாட்டைச் சோ்ந்த பனாமா என்றற கப்பல் வந்தது. அந்த கப்பலில் அனுமதியற்ற வகையில் 4 இந்தியா்கள் இருப்பதாக, சென்னை துறைமுக குடியுரிமை அதிகாரிகளுக்கு சனிக்கிழமை கிடைத்தது. அதைத் தொடா்ந்து அக்கப்பல் துறைமுகத்துக்கு வந்ததும், குடியுரிமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளா்கள் தவிர, கூடுதலாக இருந்த 4 இந்தியா்கள் அக்கப்பலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனா்.

சட்ட விரோதமாக கப்பலில் பணியமா்த்தப்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த பிரகாஷ், கேரளத்தைச் சோ்ந்த தேஜஸ், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சுரேஷ் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த புனித் ஆகிய அவா்கள் 4 பேரும் அவரவா் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்.

இச்சம்பவம் தொடா்பாக துறைமுக காவல்துறையினருக்கு புகாா் அளிக்கப்பட்டதை அடுத்து உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக 4 பேரையும் கப்பலில் ஏற்றி வந்த அதன் கேப்டன் பவன் குமாரை போலீஸாா் கைது செய்தனா். அத்துடன் கப்பலின் உரிமையாளா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com