
சென்னை கோயம்பேடு அருகில் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கொத்தடிமை குழந்தை தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்த ஐந்து சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாங்கிய கடனுக்காக கொத்தடிமை குழந்தை தொழிலாளர்களாக ஆறு மாதம் முதல் ஐந்து வருடங்களாக வேலை செய்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் 12 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள். பச்பன் பச்சாவோ மற்றும் ஐ.ஜே.எம் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த தகவலின் பேரில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
விசாரணை மற்றும் மீட்கப்பட்டவர்களுக்கு விடுதலைச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள : அம்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர். திருமதி வி.பாரதி தேவி (9445461834) மற்றும் குறள் அமுதன் (9840967250)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.