கார்கில் வெற்றி தினத்தை பசுமை மரங்கள் நட்டு நெகிழச் செய்த ராணுவ பயிற்சி மைய அதிகாரிகள்

இந்திய எல்லைக்குள் ஆக்ரமிக்க முயன்ற பாகிஸ்தானை அடித்து விரட்டிய வெற்றி நிகழ்வு
கார்கில் வெற்றி தினத்தை பசுமை மரங்கள் நட்டு நெகிழச் செய்த ராணுவ பயிற்சி மைய அதிகாரிகள்

இந்திய எல்லைக்குள் ஆக்ரமிக்க முயன்ற பாகிஸ்தானை அடித்து விரட்டிய வெற்றி நிகழ்வு கார்கில் போர். 1999 மே மாதம் ஆரம்பித்து ஜூலை 1999 வரை நிகழ்ந்த இந்த போரில் நம் தேசத்தை காக்க சுமார் 527 ராணுவ வீரர்கள் இன்னுயிரை இழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சுமார் 4000 வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்த போரின் வெற்றியாக  பாகிஸ்தானின் ஆக்ரமிப்பு அகற்றப்பட்டதுடன் கார்கில் பகுதி முழுதுமாக இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இந்த வீரதீர நிகழ்வில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களின் தியாகத்தை போற்றும்விதமாக ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினம் ஜூலை 22 முதல் 27 வரை  நினைவுகூரப்படுகிறது. தேசப்பற்றை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். புதுடில்லியில் நடக்கும் இந்த வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் அதிகாரிகளும் பங்கேற்றார்கள்.

இதை முன்னிட்டு இந்தியாவின் பெருமைமிகு ராணுவ பயிற்சி மையங்களில் ஒன்றான ஆபிசர்ஸ் டிரெயினிங் நெகிழ்ச்சிமிகு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக அதே எண்ணிக்கையில் 527 பசுமை மரங்கள் பயிற்சி மைய வளாகம் முழுவதும் நடப்பட்டது. இந்நிகழ்வில் தென்மண்டல ராணுவ தளபதி லெப்டினெண்ட் மேஜர் ஜெனரல் சஞ்சீவ் கனல், ராணுவ பயிற்சி மையத்தின் தலைமை அதிகார் மேஜர் ஜெனரல்  அருண் மற்றும் ஏராளமான இளம் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.

வீரசாகசம் புரிந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவது என்பது மலர் அஞ்சலி செலுத்துவது அவர்களை சாகச செயல்களை புகழ்ந்து பேசுவது என்ற நடைமுறையில் இருந்து மாறுபட்டு பசுமை மரங்களை நடும் நிகழ்வு ஒரு வித்தியாசத்திற்காக செய்யவில்லை. இப்புவியில் உடல் அளவில் அவ்வீரர்கள் இல்லாவிட்டாலும் மரமாய் வளர்ந்தோங்கி அவர்கள் என்றென்றும் இந்த பூமி குளிர்ந்திட சேவையாற்றி கொண்டிருக்க வேண்டும் என்ற மானசீக விருப்பம் வெளிப்படுவதாக பார்வையாளர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர். 

பூமி மாசுபடுதலின் வேகம் பரவிக் கொண்டே இருக்கும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் ஒரே வழி பசுமை மரங்களை வளர்ப்பது. இது ஒரு வகையில் பசுமை வளர்ப்பதற்கான போர். மரங்கள் நடுவது போன்ற சமூக பணியின் மூலம் இதனை முன்னிறுத்தும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் இந்தியாவிற்கு ஒரு நல்ல முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com