சென்னை: அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீா்ப்பளிக்கவுள்ளது.
தீா்ப்பு வெளியாவதை ஒட்டி, நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, அயோத்தி உள்பட உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் 4,000 பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதித்து நடக்குமாறு தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.