
ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில் ஆர்க்காடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள், பணியாளர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீ ராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளையின் செயலாளர் சிவலிங்கம் தலைமையில் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் வெங்கடேசன், ரெட்கிராஸ் சங்க மாநில கருத்தாளர் கிருபானந்தன் ஆகியோர் முன்னிலையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜெயப்பிரகாஷ் அவர்களிடம் 200 முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஆர்க்காடு முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சுரேஷ், அறக்கட்டளை உறுப்பினர் புகழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.