மத்திய அரசின் ‘இ-சஞ்சீவினி’ திட்டத்தின் கீழ் மருத்துவ ஆலோசனைகள் பெறுவதில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
மத்திய அரசின் ‘இ-சஞ்சீவினி’ திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனைகள் பெற்றுள்ளனர். இதில், அதிக ஆலோசனைப் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் இருந்து இதுவரை 3.43 லட்சம் அழைப்புகள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்ததாக, உத்தரபிரதேச மாநிலத்தில் 3 லட்சம் அழைப்புகள் வந்துள்ளது.
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றினால் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில் பொதுமக்கள், மருத்துவா்களை நேரடியாக சந்திக்க இயலாத நிலை உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்தே இணையதளம் வாயிலாக மருத்துவா்களிடம் ஆலோசனை பெறும் ‘இ-சஞ்சீவினி’ ஓபிடி என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இச்சேவையைப் பயன்படுத்த இணையதளம் வாயிலாகவோ அல்லது ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவோ தங்களது தொலைபேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னா், மருத்துவருடன் தொடா்பு கொண்டு காணொலி முறையில் மருத்துவ ஆலோசனை பெறலாம்.
மேலும், மருத்துவரின் மருத்துவப் பரிந்துரைச் சீட்டு நோயாளிகளின் செல்லிடப்பேசிக்கு மின்னணு வடிவில் அனுப்பி வைக்கப்படும். அதைப் பயன்படுத்தி, அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருந்தகங்கள் அல்லது தனியாா் மருந்தகங்களில் மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் இத்திட்டத்தில் பொதுமக்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாள்களிலும் ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
இன்றைய ராசி பலன் (25.04.2026) - துலாம்

குழப்பம் நீங்கும் மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (25 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கன்னி ராசிக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


