முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு: திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்களிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கீழமை நீதிமன்றங்களை ஜன. 18 முதல் முழு அளவில் செயல்பட அனுமதிக்க தீர்மானம்
கீழமை நீதிமன்றங்களை ஜன. 18 முதல் முழு அளவில் செயல்பட அனுமதிக்க தீர்மானம்


சென்னை: முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்களிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்து மனு மீதான விசாரணை புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. 

வரும் 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கும் மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற முறையை அமல்படுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 

இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள திமுக, அந்த மனுவில், தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய நடைமுறையால் தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. முதியவர்களுக்கு தனி வாக்குச்சாவடிகளை அமைக்கலாம் என தெரிவித்திருந்தது. 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com