

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சின்னாக்கவுண்டம்பட்டியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அப்போது மதுக்க்டையை சுற்றி குடியிருப்புகள், கோயில், கல்விச்சாலைகள் இருப்பதால் மதுக்கடை அப்பகுதியில் திறக்கக்கூடது என அங்கு இருக்கும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கும் இடையே மதுக்கடை குவாட்டர் பாட்டில் உடைத்து பூஜை செய்து மது விற்பனை தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் புத்தாநத்தம் பகுதியிலிருந்து புறப்பட்டு புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட பேரணியாக வந்த நிலையில், அவர்களை போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர். இருப்பினும் பொதுமக்கள், போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வருவாய் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று இடத்தில் கடையை திறக்க வேண்டும் என வலியுறுத்தியதால், புதிய மதுக்கடை திறந்து 2 மணி நேரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது. அதனைத்தொடர்ந்து போரட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.