புதுக்கோட்டை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 71% நிறைவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரிப் பாசனப் பகுதிகளில் தொடங்கப்பட்ட கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் 71 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 71% நிறைவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரிப் பாசனப் பகுதிகளில் தொடங்கப்பட்ட கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் 71 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரான உயர்கல்வித் துறைச் செயலர் அபூர்வா தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

காவிரிப் பாசனப் பரப்பான 27 ஆயிரம் ஏக்கரும் மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படும்போது பயன்பெறும் அளவுக்கு இப்பணிகளுக்காக கூடுதல் எந்திரங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அபூர்வா தெரிவித்தார்.

ரூ. 1.74 கோடியில் 94 கி.மீ. தொலைவுக்கு கால்வாய்கள் தூர்வாரத் திட்டமிடப்பட்டு தற்போது வரை 64 கிமீ தொலைவு தூர்வாரி முடிக்கப்பட்டுள்ளது.

கால்வாய்கள் தூர்வாரும் பணியை ஆய்வு செய்யும்  பணியில் காமிரா பொருத்தப்பட்ட ஆளில்லா சிறியரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com