

நாகர்கோவில் வடசேரி பகுதியில் நள்ளிரவில் திறக்கப்பட்ட ஜெயலிதா சிலையை போலீஸார் அகற்றினர். இதில் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நாகர்கோவில் வடசேரி பரதர் தெரு ராஜ பாதை சந்திப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலை உள்ளது.
இந்நிலையில் இந்த சிலையின் அருகில் நேற்று இரவு ஜெயலலிதாவின் 7 அடி உயர வெண்கல சிலை வடசேரி பகுதி அதி மு க வினரால் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுகவினர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் அப்பகுதிக்கு சென்று உரிய அனுமதி இன்றி வைத்துள்ள சிலையை அகற்ற வேண்டும் என்று கூறினர்.
இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் போலீஸார் சிலையை துணியால் மூடியதால் அதிமுகவினர் போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் நாகர்கோவில் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் ஏற்பட்ட உடன்பாட்டின் படி அதிமுகவினர் ஜெயலலிதா சிலையை எடுத்து சென்றனர்.
இச்சம்வத்தால் வடசேரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.