சிங்கப்பூரில் மேலும் 657 பேருக்கு கரோனா உறுதி, பெரும்பாலானோர் வெளிநாட்டினர்!

சிங்கப்பூரில் மேலும் 657 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். 
சிங்கப்பூரில் மேலும் 657 பேருக்கு கரோனா உறுதி, பெரும்பாலானோர் வெளிநாட்டினர்!
Updated on
1 min read

சிங்கப்பூரில் மேலும் 657 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,205 ஆக உயர்ந்துள்ளது.

ஆய்வகம் ஒன்றிலிருந்து முடிவுகள் தாமதமாக வருவதால் கடந்த சில நாள்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சற்றுத் தெளிவில்லாமல் இருந்ததாக நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், பணி ஆணைகளைப் பெற்று, தொழிலாளர் கூடங்களில் தங்கியிருப்பவர்கள் என்றும் 10 பேர் சிங்கப்பூர்க் குடிமக்கள் அல்லது நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்கள் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com