சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் 5 நாள் பயணமாக இந்தியா வருகை

கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் ஆர் கிபோச்சி நவம்பர் 2 முதல் 6 வரை ஐந்து நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளதாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image

இந்திய ராணுவத் தலைவர் ஜெனரல் எம்.எம்.நாரவனேவை சந்திக்கும் கென்யா பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் ஆர் கிபோச்சி

Updated On :2 நவம்பர் 2020, 2:09 pm

ANI

புதுடெல்: கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் ஆர் கிபோச்சி நவம்பர் 2 முதல் 6 வரை ஐந்து நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளதாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்திய இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் கூறுகையில், "இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், ஆப்பிரிக்காவுக்கு வெளியே வருகை தரும் முதல் நாடு இந்தியா ஆகும்.

அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.