

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, வண்ணாத்திக்குட்டை வள்ளலார் கருணைக்கரங்கள் தருமச்சாலையில், மழை வேண்டி சிறப்பு பூஜை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆதரவற்றோர், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, இருப்பிடம் தேடிச் சென்று அன்னதான உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
வாழப்பாடி அடுத்த மேற்குராஜபாளையம் ஊராட்சி, வண்ணாத்திக்குட்டை அக்ஷயா பள்ளி வளாகத்தில், வள்ளலார் கருணைக்கரங்கள் தருமச்சாலை இயங்கி வருகின்றது.
மாதந்தோறும் பூசம் தினத்தில், அணையாதீபம் ஏற்றி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூசம் தின பூஜையில், மழை வேண்டி, அணையா தீபமேற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமன்றி, சுற்றுப்புற கிராமத்திலுள்ள ஆதரவற்றோர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, இருப்பிடம் தேடிச் சென்று அன்னதான உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் அன்னதான பொட்டலங்கள் வினியோகிக்கும் பணிகளை, கருணைக்கரங்கள் தொண்டு நிறுவன நிர்வாகி சோமம்பட்டி சிவா, ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன், விஐய், செல்வி, அருணாசலம், பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.