பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில், செப். 8, 2020

செய்திகள் - படங்களில்
பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில், செப். 8, 2020
Updated on
2 min read

புது தில்லியில் செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் எட்டாவது வாசல் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தார் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா. 

ஹிந்தி நடிகர் சுசாந்த் சிங் தற்கொலை வழக்கில் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்காக மும்பையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு மருத்துவ சோதனைக்காக அழைத்துச் செல்லப்படும் ஹிந்தி நடிகை ரியா சக்கரவர்த்தி.

பெங்களூருவில் போதைப் பொருள் தொடர்பான வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார் கன்னட நடிகை சஞ்சனா கல்ரானி.

அஞ்சலி: ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை  காஷ்மீரத் தலைவரும் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனருமான ஷேக் அப்துல்லாவின் நினைவிடத்தில் அவருடைய நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்துகிறார்கள் அவருடைய மகன் பரூக் அப்துல்லாவும் பேரன் ஓமர் அப்துல்லாவும் மூத்த தலைவர்களும்.

சென்னையில் காதி கிராப்ட் வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள். கரோனா பிரச்சினை காரணமாக வந்துசேராததால் வெளி மாநில பொம்மைகள் காட்சியில் இடம் பெறவில்லை.

இத்தாலியில் வெனிஸ் நகரில் செவ்வாய்க்கிழமை வெனிஸ் திரைப்பட விழாவின்போது லைலா இன் ஹைஃபா படத்துக்காகத் தற்படம் எடுத்துக்கொண்ட நடிகைகள் நாமா ப்ரீஸ் (இடது), பாகிரா அப்லாஸி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபையில் நடைபெற்ற புகைப்படப் பிடிப்பில் இஸ்ரேலிய கொடி போர்த்திய இஸ்ரேலைச் சேர்ந்த மாடல் அழகி மே டேகர் (இடது) மற்றும் அரபுக் கொடி போர்த்திய துபையைச் சேர்ந்த மாடல் அழகி அனஸ்தாஸியா பண்டாரென்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com