இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் மோசமாக இருக்கும்: உலக வங்கி

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் முப்பது ஆண்டுகளுக்கு முன் பொருளாதார சீர்திருத்தத்தின்போது இருந்ததைவிட மோசமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் மோசமாக இருக்கும்: உலக வங்கி

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் முப்பது ஆண்டுகளுக்கு முன் பொருளாதார சீர்திருத்தத்தின்போது இருந்ததைவிட மோசமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

2021 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 1.5 - 2.8 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட 'தெற்காசிய பொருளாதார பார்வை' அறிக்கையில் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று இந்தியப் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள உலக வங்கி, 1991 தாராளமயமாக்கல் காலத்துக்குப் பிறகு இதுவே மோசமானதாக இருக்கும் என்று கூறியுள்ளது.

ஏற்கெனவே நிதித் துறை மிகவும் மோசமாக இருந்த சூழலில் கரோனா நோய்த் தொற்று மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியப் பொருளாதார நிலை பற்றி ஏற்கெனவே பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும் தெரிவித்ததைப் போலவே உலக வங்கியும் குறிப்பிட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4 சதவிகிதமாகக் குறையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி குறிப்பிட்டிருந்தது.

முந்தைய ஆண்டில் 5.2 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 சதவிகிதமாகக் குறையும் என எஸ்அன்ட்பி குளோபல் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

2020 ஆண்டில் ஏற்கெனவே மதிப்பிட்டிருந்த 5.3 சதவிகிதத்துக்குப் பதிலாக 2.5 சதவிகிதமாகக் குறையும் என்று மூடி முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com