அதிகரிக்கும் மரணங்கள்: பிரிட்டனில் ஒரே இடத்தில் உடல்கள் புதைப்பு

கரோனா தொற்றால் தொடர்ந்து அதிகளவில் உயிரிழப்புகள் நேர்ந்து வரும் நிலையில் லண்டனில் ஒரே இடத்தில் அதிகளவிலான பெரியளவில் புதைகுழிகள் தோண்டி சடலங்களைப் புதைக்கின்றனர்.
அதிகரிக்கும் மரணங்கள்: பிரிட்டனில் ஒரே இடத்தில் உடல்கள் புதைப்பு

கரோனா தொற்றால் தொடர்ந்து அதிகளவில் உயிரிழப்புகள் நேர்ந்து வரும் நிலையில் லண்டனில் ஒரே இடத்தில் அதிகளவிலான பெரியளவில் புதைகுழிகள் தோண்டி சடலங்களைப் புதைக்கின்றனர்.

தென் கிழக்கு லண்டனில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பெருங்குழிகள் தோண்டப்பட்டிருக்கின்றன.

சிசில்ஹர்ஸ்ட் பகுதியிலுள்ள கெம்னல் பூங்கா கல்லறையில் பத்து கஜ நீளமும் இரண்டடி அகலமும் கொண்ட குழிகள் தோண்டப்பட்டு உடல்கள் வரிசையாகப் புதைக்கப்படுகின்றன. 

                        Image Credit- Pierre Alozie / eyevine

புதைப்பதற்காக 50-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் காத்திருப்பதாக இறுதிச் சடங்கு  ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கேற்பவே உடல்கள் புதைக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனிடையே, கிழக்கு லண்டனில் தற்காலிக பிணவறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன (மேற்கத்திய நாடுகளில் இறந்தவர்களின் உடல்கள் சில நாள்கள் அல்லது சில வாரங்கள் கழித்துகூட புதைக்கப்படுவதுண்டு). வைரஸ் காரணமாக இறந்தவர்களின் உறவினர்கள்கூட வர இயலாத நிலை இருக்கிறது.

தற்காலிகப் பிணவறைகள் அமைப்பதிலும் இறந்தவர்களின் உடல்களைக் கையாள்வதிலும் ராணுவ வீரர்களும் பயன்படுத்தப்படுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com