உயிர் அச்சத்தால் ஒளிந்துகொண்ட மக்களால் மூச்சுவிடுகிறது இயற்கை

கரோனா நோய்த் தொற்றின் மூர்க்கமான தாக்குதலால் ஒருபுறம் திணறிக்கொண்டிருந்தாலும் மறுபுறம் பெரும்பேறாக உலகின் பல பகுதிகளில் இந்த பூமிப் பந்து  தன் இயல்பு நிலை என்னவெனக் காணத் தொடங்கியிருக்கிறது.
உயிர் அச்சத்தால் ஒளிந்துகொண்ட மக்களால் மூச்சுவிடுகிறது இயற்கை

கரோனா நோய்த் தொற்றின் மூர்க்கமான தாக்குதலால் ஒருபுறம் திணறிக்கொண்டிருந்தாலும் மறுபுறம் பெரும்பேறாக உலகின் பல பகுதிகளில் இந்த பூமிப் பந்து தன் இயல்பு நிலை என்னவெனக் காணத் தொடங்கியிருக்கிறது.

கரோனா மீதான பேரச்சம், மக்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. ஒட்டுமொத்தமாக சுற்றுலா முடிவுக்கு வந்திருக்கிறது. ஊர்விட்டு ஊர், நாடு விட்டு நாடு யாருமே செல்வதில்லை. கொண்டாட்டங்கள் இல்லை. எனவே, சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேடு இல்லை!

வழக்கம்போல வாகனங்கள் ஓடாததால் உலகம் முழுவதுமே கரியமில வாயுவின் வெளியேற்றம் வெகுவாகக் குறைந்துவிட்டது. திரும்பிய  பக்கமெல்லாம் அமைதி, அமைதி, அமைதி.

மிக அதிகளவில் உயிரிழப்புகளைச் சந்தித்த இத்தாலியை நோக்கி டால்பின்கள் மீண்டும் வந்திருக்கின்றன. வெனிஸ் நகரின் கால்வாய்கள் தெளிந்திருக்கின்றன. சீனாவின் வான்வெளி மிகத் தெளிவாக இருக்கிறது. 

இத்தாலியின் கடற்கரையோரம் முழுவதும் எப்போதும் கப்பல்கள்தான் நின்றுகொண்டிருக்கும். இப்போது அவையெல்லாம் ஓய்ந்து ஒதுங்கிவிட்ட நிலையில் டால்பின்கள் நடமாடுகின்றன.

இத்தாலியில் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வெனிஸ் நகர வீதிக் கால்வாய்கள் எல்லாம் முன்னெப்போதுமில்லாத அளவுக்குத் தெளிவாக இருக்கின்றன, மீன்கள் நீந்துவதைக் காண முடிகிறது. வாத்துகள் மீண்டும் தேடி வந்திருக்கின்றன.

சென்னை மாநகரிலேயேகூட சாலைகளில் மான்களைக் காண முடிகிறது. மூணாறில் இரவு நேரங்களில் வீதிக்கு வந்துசெல்கின்றன யானைகள்.

இத்தனை துயரங்களுக்கு நடுவிலும் மகிழ்ச்சியடையவும் நிறைய விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

உலகம் முழுவதுமே காற்று மாசு மிகமிகக் குறைந்திருக்கிறது. கரோனா நோய்த் தொற்று தோன்றிய வூஹான் மாகாணத்தின் மேலிருக்கும் வான்வெளியில் நைட்ரஜன் ஆக்சைட் வாயுவின் இருப்பு அற்றுப் போயிருக்கிறது. வீட்டுக்கு வெளியே பறவைகள் கீச்சிடுவதைக்கூட கேட்க முடிகிறது என்று மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். 

கரோனாவிலிருந்து மனிதர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமேயானதல்ல, இன்னமும் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றையும் சுதந்திரமாக, நிம்மதியாக வாழவிட வேண்டும். இல்லாவிட்டால் என்றேனும் ஒரு நாள் மறுபடியும் இயற்கை பழி தீர்த்துக்கொண்டுவிடும்.

இந்த ரணகளத்திலும்கூட ஒரு குதூகலம் இருக்கத்தான் செய்கிறது! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com