முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
உணவுப் பொருள்கள் விநியோகத்தில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் கேமரூன்!
By DIN | Published On : 19th April 2020 03:04 PM | Last Updated : 19th April 2020 03:04 PM | அ+அ அ- |

கரோனா நோய்த் தொற்றால் உலகமே அலறிக் கொண்டிருக்கும் நிலையில் பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம்கூட நேரடியாகக் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இத்தகைய தலைவர்களில் ஒருவர் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன்.
அவருடைய இல்லம் இருக்கும் சிப்பிங் நார்டன் பகுதிக்கு அருகே முதியோரின் இல்லங்களுக்குச் சென்று உணவுகளை வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றன.
கரோனா பிரச்னையால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் முதியோர்களின் இல்லத்துக்குச் சென்று உணவுப் பொருள்களை வழங்கும் பணியில் 35 தன்னார்வத் தொண்டர்களில் இவரும் ஒருவராகச் செயல்பட்டு வருகிறார்.
முதியோருக்குக் கொண்டுசென்று அளிப்பதற்காக பார்சல்களை வேனில் முன்னாள் பிரதமர் கேமரூன் ஏற்றியபோது படமெடுக்கப்பட்டதாக தி சன் தெரிவித்துள்ளது.
டோரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கேமரூன், கடந்த நான்கு வாரங்களுக்கும் மேலாகத் தன்னுடைய மகள் நான்சியுடன் சேர்ந்து நேரடியாக மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பகுதிகளில் மக்களுக்கு இடையே நடந்து திரிவது மிகவும் உற்சாகமளிப்பதாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள கேமரூன், கடினமான இந்தத் தருணத்தில் பிரிட்டிஷ் அரசு மிகச் சிறந்த பணியாற்றியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.