பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 27, 2020
By DIN | Published On : 27th February 2020 04:36 PM | Last Updated : 28th February 2020 05:05 PM | அ+அ அ- |

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறையில் சிவபுரி பகுதியில் எரிக்கப்பட்ட கார்கள்.
வன்முறையில் உயிரிழந்த தங்களுடைய நண்பர் மோஷின் அலியின் உடலைப் பெறுவதற்காக புது தில்லி குருதேஜ் பகதூர் மருத்துவமனையின் உடல்கூராய்வுக் கூடத்துக்கு வெளியே அழுதுகொண்டே காத்திருக்கும் நண்பர்கள்.
கலவரத்தில் தங்கள் வீடுகளை இழந்ததால் வடகிழக்கு தில்லியில் சிவ விகார் பகுதியிலுள்ள வெளியேறும் மக்கள்.
யமுனா விகார் பகுதியிலிருந்து வெளியேறும் மக்கள்.
கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஜப்பான் அருகே கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து விமானத்தில் அழைத்து வரப்பட்டவர்களுக்குப் புது தில்லி விமான நிலையத்தில் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனை.
தென் கொரியாவில் யோங்டேக்கிலுள்ள ஹம்ப்ரீஸ் முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள். கரோனா வைரஸ் அச்சம் காரணமாக இரு நாடுகளும் இணைந்து நடத்தவிருந்த ராணுவ ஒத்திகைகள் ஒத்திவைப்பட்டிருக்கின்றன.
ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரில் இருநாள் பயணமாக வந்திறங்கிய தன்னுடைய காரில் பெட்டியைக் கொண்டுசென்று வைக்கிறார் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்.