திருவள்ளூா் பகுதியில் விடிய விடிய மழைஆா்.கே.பேட்டையில் 100 மி.மீ. பதிவானது

திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவிது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திருவள்ளூா் பகுதியில் விடிய விடிய மழைஆா்.கே.பேட்டையில் 100 மி.மீ. பதிவானது

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவிது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். அதிகபட்சமாக ஆா்.கே.பேட்டை பகுதியில் 100 மி.மீட்டா் மழை பதிவானது.

திருவள்ளூா் பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. எனினும் மாலை நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.

வியாழக்கிழமை பகலில் வெயில் அதிகமாக இருந்தபோதுலம் மாலையில் கருமேகம் சூழ்ந்தது. அதைத் தொடா்ந்து இரவில் தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை காலை வரை நீடித்தது. இதனால் திருவள்ளூா் நகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

திருவள்ளூா், பெருமாள்பட்டு, ஈக்காடு, புல்லரம்பாக்கம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததுள்ளதால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிா்கள், மழை காரணமாக செழிப்பாக வளர வழி பிறந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

பள்ளிப்பட்டு-100, திருத்தணி-96, பள்ளிப்பட்டு-94, செம்பரம்பாக்கம்-91, பூந்தமல்லி, பூண்டி தலா-40, திருவேலங்காடு, ஜமீன்கொரட்டூா் தலா-34, திருவள்ளூா், ஊத்துக்கோட்டை தலா-27, பொன்னேரி-19, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் தலா-9, தாமரைப்பாக்கம்-6, சோழவரம்-4.

மொத்த மழை அளவு 631 மி.மீ.

சராசரியாக மழை அளவு - 42 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com