ஈரோடு பேருந்து நிலையம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்

ஈரோட்டில் கரோனாவை தடுக்கும் வகையில்  ஆர் கே வி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், ஈரோடு பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது  
ஈரோடு பேருந்து  நிலையம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்

ஈரோடு: ஈரோட்டில் கரோனாவத் தடுக்கும் வகையில் ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், ஈரோடு பேருந்து நிலையத்திற்கு தற்காலிகமாக கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கே மொத்த வியாபாரமும் சில்லரை வியாபாரமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதற்கு மாற்று இடமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் தற்காலிக மார்க்கெட்டில் அமைக்கப்பட்டுள்ளது.  இன்னும் ஓரிரு நாளில் வ.உ.சி. பூங்கா பகுதியில் இருக்கும் காய்கறி மார்க்கெட் முழுமையாக செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில் இன்று ஈரோடு பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி மார்க்கெட்டில் வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்கனவே முகக்கவசம் அணிந்து வந்தால்தான் காய்கறி வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலானோர் அரசு அறிவித்தபடி முகக்கவசங்கள் அணிந்தும், ஒருசிலர் முகக்கவசம் அணியாமலும் வந்தனர்.

மேலும், ஒரு சிலர் சமூக இடைவெளிவிட்டு காய்கறிகள் வாங்காமல் தங்கள் இஷ்டம் போல் அங்குமிங்கும் அலைந்து திரிந்ததை காண முடிந்தது. அரசு என்னதான் அறிவித்தாலும் ஒரு சிலர் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் இருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com