

சென்னை: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் பயனை மக்களும் அடையும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தும் அரசுகள், விலை குறையும்போது மக்களுக்கும் குறைக்க வேண்டாமா என்று அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.