2021-ல் நான்தான் முதல்வர்! : நடிகர் வடிவேலு
By DIN | Published On : 12th March 2020 10:55 PM | Last Updated : 12th March 2020 11:25 PM | அ+அ அ- |

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த திரைப்பட நடிகர் வடிவேலு, 2021-ல் முதல்வராக வருவேன் என்று குறிப்பிட்டார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வியாழக்கிழமை இரவு நடிகர் வடிவேலு வந்தார். அப்போது வழக்கம் போல் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டும் செயல்களைச் செய்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ரஜினியின் அரசியல் நுழைவு பற்றி அவரிடம் கேட்டபோது, நடிகர் ரஜினிகாந்த் எப்ப அரசியலுக்கு வருவார் என்று எனக்கோ, உங்களுக்கோ, ஏன் அவருக்கே கூடத் தெரியாது. மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்க வேண்டும். என்னுடைய திட்டப்படி வரும் 2021-ல் நான்தான் முதல்வராக வருவேன் என நகைச்சுவையாக வடிவேலு கூறினார்.