ஸ்விட்சர்லாந்தில் ஏப். 20 வரை பள்ளிகள் மூடல்

கரோனா தற்காப்பு நடவடிக்கையாக ஸ்விட்சர்லாந்தில் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுகின்றன.
ஸ்விட்சர்லாந்தில் ஏப். 20 வரை பள்ளிகள் மூடல்

ஸ்விட்சர்லாந்தில் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுகின்றன. அதைத் தொடர்ந்து இரு வார விடுமுறை என்பதால் பள்ளிகள் மூடிக் கிடக்கும். ஏப். 20 ஆம் தேதி நாட்டின் அன்றைய நிலையை பார்த்து பள்ளிகள் மீண்டும்  திறக்கப்படும் என்று ஸ்விட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

சிறு குழந்தைகளை வயதானவர்களிடம் பராமரிக்க விட்டுச் செல்வதை தவிர்க்குமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

எல்லைகள் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படுகின்றன.

ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வேலைக்கு வருவோர் மட்டும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதியோடு மட்டுமே உள் நுழையவும் என்றும் இத்தாலியிலிருந்து சுவிஸ் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே உள்வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா செல்லவோ சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வரவோ தடை விதிக்கப்படுகின்றது.

நூறு பேருக்கு மேல் பொது இடங்களிலோ நிகழ்வுகளிலோ கூடுவதைத்  தவிர்க்குமாறும், பணியாளர்கள் உட்பட ஐம்பது பேருக்கு மேல் உணவகங்களில் கூடுவதைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முடிந்தவரை பொதுப் போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவை கடினமான நடவடிக்கைகள்தான். எனினும்,  இலக்கை அடைவதற்கு இவை அவசியமாகின்றன. முழுமையான ஒத்துழைப்பு வழங்கி நோய் பரவுவதைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களை வேண்டிக் கொள்வதாகவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com