ஓசூர் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதல்: தந்தை, மகன் உள்பட மூவர் பலி
By DIN | Published On : 27th May 2020 08:13 PM | Last Updated : 27th May 2020 08:13 PM | அ+அ அ- |

ஓசூர் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள எமக்கல் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்ராஜ் மற்றும் அவருடைய மகன் வெங்கடேஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.
கெலமங்கலம் அருகே உள்ள தின்னூர் பேருந்து நிலையம் அருகே வரும்போது எதிரில் முத்தம்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சின்னராஜ் வந்த இரு சக்கர வாகனத்துடன் மோதியதி.
இந்த விபத்தில் மூவரும் அந்த இடத்திலேயே இறந்தனர். ராயக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...