இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் ஆதரவை பெறப்போவது யார்?

தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகளில் தமிழர்களின் வாக்குகளை பெற காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, பாஜக கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் ஆதரவை பெறப்போவது யார்?
இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் ஆதரவை பெறப்போவது யார்?

தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகளில் தமிழர்களின் வாக்குகளை பெற காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, பாஜக கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தேனி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ளது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்.
இங்கு தேவிகுளம், உடும்பன்சோலை, பீர் மேடு ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

மூன்று தொகுதிகளிலும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில்  90 சதவிகிதம் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

தேவிகுளம் சட்டப்பேரவைத் தொகுதி 

தேவிகுளம் சட்டப்பேரவைத் தொகுதி 65 சதவீதம் தமிழர்கள் வாழ்கின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் டி.குமார், சிபிஎம். சார்பில் - வக்கீல் ராஜா, அதிமுக சார்பில் எஸ்.கணேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அடிமாலி, எடமாலக்குடி, காந்தலூர், மாங்குளம், மூணாறு, பள்ளிவாசல், வட்டவடா, வெள்ளத்தூவல், பைசன்வேலி, சின்னக்கானல் என்ற கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு தனி தொகுதியான தேவிகுளத்தில் சிபிஐ சார்பில் ராஜேந்திரன் இரண்டு முறை வெற்றி பெற்றார்.

இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிமுக சார்பில் பெண் வேட்பாளர் கடந்த 2016 ல் போட்டியிட்டு 3 ஆவது இடத்தை பிடித்தார், இந்த முரை மனுத்தாக்கல் செய்த அதில் தவறு இருந்ததால், கடைசி நேரத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட எஸ்.கணேசன் என்பவரை அதிமுக ஆதரவு வேட்பாளராக இந்த முறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் காங்கிரஸ், கம்யூ கட்சியிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

உடும்பன்சோலை  சட்டப்பேரவை தொகுதி 

உடும்பன்சோலை சட்டப்பேரவைத் தொகுதியில்,  22 சதவிகித தமிழர்கள் வசிக்கின்றனர். சிபிஎம் சார்பில் எம்.எம்.மணி (கேரள மாநில மின்சாரத்துறை அமைச்சர்), காங்கிரஸ் சார்பில் இ.எம்.அகஸ்தி, பாஜக சார்பில் ரம்யாரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் அமைச்சர் மணிக்கும் அகஸ்திக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது.  இங்கு சிபிஎம் கட்சி 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும்  வெற்றி பெற்றுள்ளது. எனவே 2 கட்சிகளுக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரட்டையாறு, கருணாபுரம், நெடுங்கண்டம், பாம்பாடும்பாறை, ராஜாகாடு, ராஜகுமாரி, சாநாதம்பாறை, சேனாபதி, உடும்பன்சோலை, வண்டன்மேடு ஆகிய கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

பீர்மேடு சட்டப்பேரவைத் தொகுதி

பீர்மேடு சட்டப்பேரவைத் தொகுதியில் 35 சதவிகிதம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர்.  காங்கிரஸ் சார்பில் சிரியாக் தாமஸ், சிபிஐ சார்பில் வழூர் சோமன், பாஜக சார்பில் ஸ்ரீ நகரி ராஜன் போட்டியிடுகின்றனர். இங்கு ஏலப்பாறை, கோக்கையாறு, குமுளி, பீர்மேடு, பெருவந்தானம், உப்புத்துறை, வண்டிப்பெரியாறு, அய்யப்பந் கோயில், சக்குபள்ளம் ஆகி. கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

கடந்த 3 முறை  எம்.எல்.ஏ.வாக இருந்த சிபிஐ கட்சியைச் சேர்ந்த  பிஜிமோளுக்கு, கட்சி விதிப்படி  இந்த முறை வாய்ப்பு கொடுக்க வில்லை. பிஜிமோள் எம்.எல்.ஏ.வாக இருக்கும் போது முல்லைப்பெரியாறு அணை பலமில்லை என்று கூறி நடத்திய போராட்டம் எதிரொலியாக்ததான் தேனி மாவட்டத்தில் சுமார் 50 நாட்கள் முல்லைப்பெரியாறு தமிவக உரிமையை காக்க போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இங்கு கம்யூ, காங் கட்சிகளுக்கிடையேதான் போட்டி நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com