

கரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்திலுள்ள காஸியாபாத் நகரில் (வியாழக்கிழமை) எரியூட்டுவதற்காக வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் சடலங்கள். மரணங்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்வதால் இறந்தோரின் உடல்களை எரியூட்டக் காத்திருக்கும் நேரமும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
கான்பூரில் பைரவ மயானத்தில் இடைவெளியோ இடைவேளையோ இன்றி எரியூட்டப்படுகின்றன கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் உடல்கள்.
உத்தரப் பிரதேசத்திலுள்ள கான்பூர் நகரில் கரோனா பாதித்து சிகிச்சை பெறும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்காக ஆக்ஸிஜன் நிரப்பிச் செல்வதற்காக ஆக்ஸிஜன் நிரப்புநிலையத்திற்கு வெளியே உருளைகளுடன் காத்திருக்கும் உறவினர்கள்.
ஒடிசாவில் புவனேசுவரத்தில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டுச் செயல்படும் காய்கறிச் சந்தை.
பிகாரில் தலைநகர் பாட்னாவில் கரோனாவுக்கு அஞ்சிய இரவு ஊரடங்கு நடைமுறையிலுள்ள நிலையில் (புதன்கிழமை இரவு) சாலையோரங்களில் படுத்துறங்கும் வீடற்ற மக்கள்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வியாழக்கிழமை நடந்த ஆறாம் கட்ட வாக்குப் பதிவின்போது வடக்கு 24 பர்கானாவிலுள்ள பிராட்டியில் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.