பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில்

செய்திகள் - படங்களில்
பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில்

சுடுகாடுகளாகும் பூங்காக்கள்: புது தில்லியில் கரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் அதிகளவில் வரத் தொடங்கியதையடுத்து மயானங்கள் திணறுகின்றன. சடலங்களை எரியூட்டுவதற்காக டோக்கன்கள்  பெற்றுக்கொண்டு பல மணி நேரங்கள் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கும் ஒரு முயற்சியாக பல பூங்கா பகுதிகளில் புதிய மயானங்கள் அமைக்கப்பட்டு எரியூட்டு மேடைகள் கட்டப்படுகின்றன. சாரை காலே கான் பகுதியில் மயானமாகக் கொண்டிருக்கும் பூங்கா.

புது தில்லியில்  கரோனா பாதித்து இறந்தோரின்  உடல்கள் எரியூட்டுவதற்காக  காஸிபூர் மயானத்தில் வைக்கப்பட்டுள்ளன.

புது தில்லியில் சுபாஷ் நகர் மயானத்தில் அடுத்தடுத்து எரியூட்டப்படுவதற்காக (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த உடல்கள்.

உத்தரப் பிரதேசம் கான்பூர் நகரில் ஆக்ஸிஜன் நிரப்பித் தரும் மையத்தின் முன் ஆக்ஸிஜன் உருளைகளுடன் வரிசையில் காத்திருக்கும் கரோனா பாதித்தோரின் உறவினர்கள்.

புது தில்லியில் ராம்லீலா திடலில் (செவ்வாய்க்கிழமை) தாற்காலிக கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள்.

பஞ்சாபில் பாட்டியாலா நகரில் கரோனாவால் மாண்டவர்களின் சடலங்களைப் பிணக் கிடங்கிற்கு மாற்றுவதற்காகக் காத்திருக்கும் ஊழியர்கள்.

பிரிட்டனிலிருந்து புது தில்லிக்கு விமானத்தில் 100 வென்டிலேட்டர்கள் மற்றும் 95 ஆக்ஸிஜன் பிரிப்பு சாதனங்களும் வந்திறங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com