இளையான்குடியில் போலீஸ்-மக்கள் நல்லிணக்கக் கூட்டம் 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் கோட்டையூரில் வெள்ளிக்கிழமை போலீஸ்-மக்கள் நல்லிணக்கக் கூட்டம் நடைபெற்றது. 
இளையான்குடி ஒன்றியம் கோட்டையூரில் நடைபெற்ற போலீஸ்-மக்கள் நல்லிணக்கக் கூட்டத்தில் பேசும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப.மதியரசன்.
இளையான்குடி ஒன்றியம் கோட்டையூரில் நடைபெற்ற போலீஸ்-மக்கள் நல்லிணக்கக் கூட்டத்தில் பேசும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப.மதியரசன்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் கோட்டையூரில் வெள்ளிக்கிழமை போலீஸ்-மக்கள் நல்லிணக்கக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை ஊராட்சி மன்றத் தலைவர் சைமன் வரவேற்றார். 

சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசுகையில், காவல்துறை பொது மக்களின் நண்பனாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் காவல்துறையினரைப் பார்த்து பயம் கொள்ளாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து காவல்துறையினரிடம் முறையிட்டு தீர்வு காண வேண்டும்.

காவல்துறையினர் மக்களிடம் எப்போதும் நல்லிணக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
இளையான்குடி பகுதியைச் சேர்ந்த மக்கள் எப்போதும் என்னிடம் நேரில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றார்.

இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் முரளிதரன் இளையான்குடி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப. மதியரசன், துணைக் கண்காணிப்பாளர்கள் பால்பாண்டி, டேவிட், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப. தமிழரசன், இளையான்குடி கூட்டுறவு நகர வங்கித் தலைவர் நஜிமுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். 

கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் இளையான்குடி காவல் ஆய்வாளர் அழகர் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com