கருணாநிதி நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Published on
Updated on
2 min read


சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கருணாநிதியின் மகனும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, பேரவை உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், மருத்துவர் நா.எழிலன் ஆகியோர் உடனிருந்தனர். 

இதனைத்தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இவரைத்தொடர்ந்து கருணாநிதியின் பேரனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், உடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற, பேரவை உறுப்பினர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை தலைமையிட வளாகத்தில், கருணாநிதி நினைவாக ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அடையாளமாக, நாகலிங்க மரக்கன்று ஒன்றை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலைத்துறை தலைமையிட வளாகத்தில், கருணாநிதி நினைவாக ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின். 

இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமய மற்றும் அறநிலைத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் பேரவை உறுப்பினர்கள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர், இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com