

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் இ.சுதந்திரம் தலைமையில் திமுக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் கருணாநிதி உருவ படத்திற்க்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதில், மாவட்ட நெசவாளர் அணி லிங்குசாமி, வழக்கறிஞர் பிரிவு சேதுராமன், ஒன்றிய கவுன்சிலர்கள், துரைப்பாண்டி, செல்வ பாண்டி, தனலட்சுமி பன்னீர்செல்வம், ரம்யா, மாணவரணி மகன் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் திமுக கட்சி நிர்வாகிகள், மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் உசிலம்பட்டி நகரம் சார்பாக நகர செயலாளர் தங்கமலைபாண்டி தலைமையில் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. நகர 12 ஆவது வார்டு கிளை செயலாளர் நேதாஜி. மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.