
தம்மம்பட்டி: கெங்கவல்லியில் பூட்டியிருந்த வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டில் இருந்த 8 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் திருடிச் சென்றுள்ளனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி கோனார் தெருவில் வசிப்பவர் திருமலை. இவருக்குச் சொந்தமான வீட்டினை, தெடாவூரில் வசிக்கும் மகன் சேகர் (47) உபயோகப்படுத்தி வந்தார் . பகலில் மட்டும் அந்த வீட்டிற்கு வந்து சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் இவரது வீட்டு ஜன்னல் கம்பிகளை, உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த 8 பவுன் நகையையும், சேகர் அண்மையில் ஆடு, மாடு விற்று வைத்திருந்த நான்கு லட்சம் ரொக்கத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் இவரது வீட்டிற்கு அருகே உள்ள வீட்டின் ஜன்னலை உடைக்க முயற்சி செய்து, அது முடியாததால் திருடாமல் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில், கெங்கவல்லி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.