நிஜ சேது! காதலியைப் பிரிந்ததால் மனநலம் பாதித்தவர் - 20 ஆண்டுகளாகத் தனித்திருக்கிறார்

சேது படத்தில் காதலி அபித குஜலாம்பாலைப் பிரிந்ததால்  மனநலம் பாதிக்கப்பட்ட சியான் சேதுவைப் போல, புதுக்கோட்டை அருகே ஒருவர் தனது காதலியைப் பிரிந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு
தன்னை முழுவதுமாக லுங்கி ஒன்றால் போர்த்திக் கொண்டே தனது வாழ்க்கையைக் கடத்தி வரும் நாகராஜன்.
தன்னை முழுவதுமாக லுங்கி ஒன்றால் போர்த்திக் கொண்டே தனது வாழ்க்கையைக் கடத்தி வரும் நாகராஜன்.
Published on
Updated on
2 min read



சேது படத்தில் காதலி அபித குஜலாம்பாலைப் பிரிந்ததால்  மனநலம் பாதிக்கப்பட்ட சியான் சேதுவைப் போல, புதுக்கோட்டை அருகே ஒருவர் தனது காதலியைப் பிரிந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளாக தனியே ஒரு பாறையின் மீது தனது வாழ்க்கையைக் கடத்தி வருகிறார்.

பாறை பகுதிகளில் தங்கிக்கொண்டு 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கும்  நாகராஜன். 

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மூலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன், இவருக்கு இப்போது வயது 40 இருக்கலாம். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக கோவையில் தங்கியிருக்கிறார். அப்போது கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது காதல் மலர்ந்தது.

காதலில் கசிந்திருகிய நாகராஜன், அந்தப் பெண்ணுடன் மூலங்குடிக்கு வந்துவிடுகிறார். திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆனால், விதி வலியது. அந்தப் பெண்ணின் உறவினர்கள் சினிமா பாணியில் கார்களுடன் வந்து, பெண்ணை மீட்டுச் சென்றுவிடுகின்றனர்.

கூரைத் தடுப்புகளுக்குள் ஏதேதோ பொருள்களை சேகரித்து வைத்துக்கொண்டு தனது வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கும்  நாகராஜன்.

அன்று  முதல் மனநலம் பாதித்தவர்தான், தனது வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு சிறிய பாறையில் அமர்ந்தார். அவரது அண்ணன் சேகரும், அம்மா நஞ்சமாளும் மனநலம் பாதிக்கப்பட்ட நாகராஜனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை தொடங்கியுள்ளனர். எந்தப் பயனும் தெரியவில்லை. 

மனநலம் பாதிக்கப்பட்ட நாகராஜனின் தாய் நஞ்சமாள்.

இப்போது அந்தப் பாறையின் மீது நாகராஜன் தங்கி 20 ஆண்டுகள் கடந்தோடியிருக்கின்றன. அம்மா நஞ்சமாள் தினமும் வீட்டிலிருந்து உணவு எடுத்து வந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். சில கூரைத் தடுப்புகளுக்குள் ஏதேதோ பொருள்களை சேகரித்து வைத்துக்கொண்டு தன்னை முழுவதுமாக லுங்கி ஒன்றால் போர்த்திக் கொண்டே தனது வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கிறார் நாகராஜன்.

அம்மா நஞ்சமாளுக்கு இப்போது வயது 70. நூறு நாள் வேலைக்குச் சென்று தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகனைக் கவனித்து வருகிறார். இந்தக் கவனிப்பு இன்னும் எத்தனை நாள்களுக்குக் கிடைக்கும் எனத் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com