
கம்பம்: தமிழக-கேரள எல்லை லோயர் கேம்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையை அகற்ற வேண்டும் என்று கோரி கேரளம் மாநிலத்தில் மோட்டார் பைக் வாகன பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த பேரணிக்கு அனுமதிக்கக் கூடாது என்று பெரியார் வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் மத்திய அரசு கோரிக்கை வைத்தனர். தமிழக-கேரள எல்லையை முற்றுகையிட்டு போராடுவோம் என்று அறிவிப்பு செய்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த ஐந்து மாவட்ட விவசாயிகளை, உத்தமபாளையம் ஏ. எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் மறுத்தனர்.
சாலை மறியல் செய்வதற்கு அனுமதி தாருங்கள், கேரளத்தில் வாகன பேரணி சென்று கொண்டிருக்கிறது என்று கோரிக்கை வைத்தனர்.
போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர். இதனால் விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பென்னிகுயிக் மண்டபம் செல்லும் வழியில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க | எச்ஏஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
போராட்டம் எதிரொலியாக, குமுளி லோயர் கேம் மலைச் சாலையில் இருபுறமும் போக்குவரத்து தடைபட்டு வாகனங்கள் வரிசையாக நின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.