
அமெரிக்காவின் 245-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரை பக்க வாழ்த்து செய்தியில், “245-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். துடிப்பான ஜனநாயக நாடுகளாக, இந்தியாவும் அமெரிக்காவும் சுதந்திரம் மற்றும் விடுதலையின் மாண்புகளை பகிர்கின்றன.
நமது கேந்திர கூட்டணி, உண்மையான சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது”, என்று மோடி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.