பழனி பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரளம் விரையும் தமிழக தனிப்படை
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவருடன் கடந்த மாதம் 20ம் தேதி பழனிக்குச் சென்ற போது 3 பேரால் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அங்கிருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கேரள காவல்துறை தீவிரமாக இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து முன்னுக்கு பின்னான தகவல் வருவதாலும் சம்பவம் நடந்த இடம் தமிழக எல்லைக்குள் இருப்பதாலும் இவ்வழக்கைப் பற்றி விசாரிக்க தமிழக காவல்துறை ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான தனிப்படை ஒன்றை அமைத்திருக்கிறார்கள். வழக்கை விசாரிக்க தனிப்படை விரைவில் கேரளம் செல்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

