

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் காமராஜர் 119 ஆவது பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பாக கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள காமராஜர் சிலைக்கு 119 ஆவது பிறந்தநாளில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை முன்பாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் கட்சி நகர தலைவர் காந்தி சரவணன் தலைமையில் மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.எல்.விஜயகாந்தன் தொண்டரணி முருகேசன் முன்னணியில் மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன் இனிப்புகள் வழங்கினார். கட்சி நிர்வாகிகள் கணபதி, தினகரன், அர்ஜுனன் ,சரவணபவன், ஜெயகணேஷ், அரசப்பன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.