ஞானியார் குடியிருப்பில் காமராஜர் பிறந்தநாள் விழா 

சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார்குடியிருப்பில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் காமராஜரின் 119-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 
ஞானியார்குடியிருப்பில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் காமராஜரின் 119-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஞானியார்குடியிருப்பில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் காமராஜரின் 119-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார்குடியிருப்பில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் காமராஜரின் 119-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

விழாவிற்கு காமராஜர் நற்பணி மன்ற தலைவர் விஜய் ஆனந்த் தலைமை வகித்தார். புதுக்குளம் பஞ்சாயத் தலைவர் பாலமேனன், வடக்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் பாலசிங் முன்னிலை வைகித்தனர். மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சக்திவேல் முருகன் வரவேற்றார். 

இதில் காமராஜர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் அதிமுக ஒன்றிய பிரதிநிதி சண்முகநாதன், ஊராட்சி உறுப்பினர் தினேஷ்குமார், பாஜக பிரமுகர் மணிகண்டன், ஊர் பிரமுகர்கள் சிங்கராஜ், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிராம காங்கிரஸ் தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com