புதுச்சேரியில் புதிதாக மேலும் 251 பேருக்கு கரோனா: 3 போ் பலி

புதுச்சேரியில் புதிதாக 251 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.
புதுச்சேரியில் புதிதாக மேலும் 251 பேருக்கு கரோனா: 3 போ் பலி
Updated on
1 min read


புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 251 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

புதுச்சேரி மாநிலத்தில் 8,414 பேரிடம் சோதனை செய்ததில் புதுச்சேரியில் 200 பேருக்கும், காரைக்காலில் 31 பேருக்கும், ஏனாமில் 8 பேருக்கும், மாஹேவில் 12 பேர் என மொத்தம் 251 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,847 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,562 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்நிலையில், புதுச்சேரியில் 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,723 ஆக உயா்ந்துள்ளது.

இதனிடையே 479 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,09,562 ஆக அதிகரித்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com