பூந்தமல்லி அருகே அனைத்து நவீன வசதியுடன் கூடிய சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கிவைத்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.
பூந்தமல்லி அருகே அனைத்து நவீன வசதியுடன் கூடிய சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கிவைத்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.

பூந்தமல்லி அருகே ஆரம்ப சுகாதார நிலையம் அமைச்சர் தொடங்கி வைப்பு

பூந்தமல்லி அருகே அனைத்து நவீன வசதியுடன் அமைக்கப்பட்ட சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
Published on


திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே அனைத்து நவீன வசதியுடன் அமைக்கப்பட்ட சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் அருகே பூந்தமல்லி வட்டத்தில் மக்கள் தொகை 1.24 லட்சம் பேர் மருத்துவ தேவைகளுக்காக பூந்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேசிய நகர்புற சுகாதார திட்டத்தில் ஏற்கனவே நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் கிராமபுற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், பாரிவாக்கம் ஊராட்சியில் உள்ள 3 கிராமங்களை சேர்ந்த 57 ஆயிரம் பொதுமக்கள் மருத்துவ தேவையயை பூர்த்தி செய்வதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி முடிந்துள்ளது.

இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை வகித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் போதுமான அளவு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மகப்பேறு குழந்தைகள் நலன், வளர் இளம் பருவ பெண்கள் நலன், தொற்று மற்றும் தொற்றா நோய் தடுப்பு, நாய்கடி சிகிச்சை, விபத்து சிகிக்சை, இ.சி.ஜி பரிசோதனை வசதிகளும் உள்ளது.

இதில், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ஒன்றியக்குழு தலைவர் ஜெயகுமார், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com