விரைவில் கிளப்ஹவுஸில் கூடுதல் வசதிகள்?

கிளப்ஹவுஸ் செயலியில் பயனர்கள் உரையாடிக் கொள்வதற்கு ஏற்ப புதிய வசதிகளை ஏற்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் கிளப்ஹவுஸில் கூடுதல் வசதிகள்?
விரைவில் கிளப்ஹவுஸில் கூடுதல் வசதிகள்?
Updated on
1 min read

கிளப்ஹவுஸ் செயலியில் பயனர்கள் உரையாடிக் கொள்வதற்கு ஏற்ப புதிய வசதிகளை ஏற்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆண்ட்ராய்டு தளத்தில் சமீபத்தில் அறிமுகமான செயலி கிளப்ஹவுஸ். பயனர்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாட உதவும் இந்த செயலி தற்போது பல்வேறு தரப்பினரிடையும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்நிலையில் கிளப்ஹவுஸ் செயலியில் மேலும் கூடுதல் வசதிகளை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது பயனர்கள் உரையாடிக் கொள்ள வசதிகள் உள்ள நிலையில், ஒருவருக்கொருவர்கள் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கான கூடுதல் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்த ஆலோசனையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

சந்தையில் உள்ள பல்வேறு செயலிகளுடன் போட்டியிடுவதற்கு இந்த புதிய வசதிகள் உதவியாக இருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com