12.30 மணி நிலவரம்: மேற்கு வங்கத்தில் 201 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் மாநிலத்தில் ஆளும்  திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி  201 இடங்களில் முன்னிலையில
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் மாநிலத்தில் ஆளும்  திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி  201 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. 

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. எட்டு கட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுதாக வாக்குக் கணிப்புகள் தெரிவித்தன. 

மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் ஆட்சி அமைக்க 148 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதில் 12.30 மணி நிலவரப்படி, மேற்கு வங்கம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வரும், திரிணமூல் தலைவருமான மம்தா பானர்ஜி 1,417 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். 

மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 201 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.

இதுதொடா்பாக தோ்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘வாக்கு எண்ணிக்கையில் 292 தோ்தல் பாா்வையாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 256 மத்திய கம்பெனி படையினா் பாதுகாப்புப் பணியில் உள்ளனா். மாநிலம் முழுவதும் 23 மாவட்டங்களில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் குறைந்தது 15 முறை கிருமிநாசினி தெளிக்கப்படும். வழக்கமாக 14 மேஜைகள் இருக்கும் அறைகளில், தற்போது ஏழு மேஜைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு மையங்களுக்கு வெளியே கூட்டம் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

மொத்தம் 292 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 89 தொகுதிகளிலும், மற்றவை  2 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com