புதுச்சேரியில் பாஜக நமச்சிவாயம், ஜான்குமார் வெற்றி! 

புதுச்சேரியில்காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து மண்ணாடிபட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நமச்சிவாயம் வெற்றி பெற்றுள்ளார். 
மண்ணாடிபட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்ற நமச்சிவாயம்.
மண்ணாடிபட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்ற நமச்சிவாயம்.

புதுச்சேரி: புதுச்சேரியில்காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து மண்ணாடிபட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நமச்சிவாயம் வெற்றி பெற்றுள்ளார். 

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்.6 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 81.70 சதவீதம் வாக்குகள் பாதிவாகின.

புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளுக்கு லாஸ்பேட்டையில் உள்ள தாகூா் அரசு கலைக் கல்லூரி, அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி மையங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு அங்குள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளுக்கு அங்குள்ள அரசு மண்டல நிர்வாக அலுவலக மையங்களிலும் 8 தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை ஒரு கூட்டணியும்,  என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மற்றொரு கூட்டணியும், மநீம, நாம் தமிழர், அமமுக, தேமுதிக மற்றும் சுயேட்சைகளும் போட்டியிட்டன. மொத்தம் 324 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தற்போது வரை என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் முன்னணியும், 3 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களில் முன்னிலையும், 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 

இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து மண்ணாடிபட்டு தொகுதியில் போட்டியிட்ட நமச்சிவாயம், காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார். 

புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ், உப்பளம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி வெற்றி பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com