
திருச்சி: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1346-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதைமுன்னிட்டு திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன்,ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜி, இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருஉருவ சிலைக்கு தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து முத்தரையர் சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.