
சென்னையில் இணைய வகுப்பில் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளாக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுமுடக்கத்துக்கு முன்பு நடைபெற்ற வகுப்புகளில் இரட்டை அா்த்தத்திலும், ஆபாசமாகவும் பேசியதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை கே.கே. நகா் தனியாா் பள்ளியி ஆசிரியா் ராஜகோபால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இணைய வகுப்பில் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ள சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சுட்டுரைப் பதிவில், “தனியார் பள்ளியின் பழைய மாணவராக மட்டுமல்லாமல், 2 குழந்தைகளுக்கு தந்தையாகவும் குழப்பமான இரவுகளைக் கழித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Been a couple of disturbing nights, not only as an old student of PSBB but also as a father of 2 young girls.
Rajagopalan is one name that’s come out today, but to stop such incidences all around us in the future, we need to act and need a complete overhaul of the system.