முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10,001 வழங்கிய திண்டுக்கல் யாசகர்
திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அந்தோணி என்ற சரவணன்(72). இவர், திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே சாலையோரத்தில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் யாசகம் பெற்று, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை சேமித்து வந்துள்ளார். அவ்வப்போது கிடைக்கும் வருமானத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், கரோனா தீதுண்மி தொற்று பாதிப்பை எதிர்கொள்வதற்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நன்கொடை வழங்குவதற்கு அந்தோணி சரவணன் முடிவெடுத்துள்ளார். அதன்படி மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமியை சந்தித்து, ரூ.10 ஆயிரத்தை பொது நிவாரண நிதிக்கு இன்று (திங்கள்கிழமை) வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் புறநகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரார்த்தனா, தனது பிறந்தநாளுக்காக சேமித்து வைத்திருந்த ரூ.4,153 யை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆட்சியர் மு. விஜயலட்சுமியிடம் வழங்கினார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் கண்ணன் என்பவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

