ஆகஸ்ட் 23 முதல் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: தமிழக அரசு அறிவிப்பு
By DIN | Published On : 19th August 2021 08:01 PM | Last Updated : 19th August 2021 08:01 PM | அ+அ அ- |

ஆகஸ்ட் 23 முதல் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: தமிழக அரசு
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் புதிதாக 1,432 பேருக்கு கரோனா தொற்று
கரோனா தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி மற்றும் பதிவெண்ணைக் பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.