முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
டிச.6இல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
By DIN | Published On : 02nd December 2021 03:12 PM | Last Updated : 02nd December 2021 03:12 PM | அ+அ அ- |

தேமுதிக தலைவா் விஜயகாந்த்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தேமுதிக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கட்சி வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக டிசம்பர் 6ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | புயல் எதிரொலி: பிரதமர் மோடி அவசர ஆலோசனை
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.