வாழப்பாடியில் அதிமுக சார்பில்  ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு 

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஒன்றிய, நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
வாழப்பாடியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுக ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள்.
வாழப்பாடியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுக ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி ஒன்றிய, நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

வாழப்பாடியில் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

வாழப்பாடி வாசவி மஹால் வளாகத்திலிருந்து, பேருந்து நிலையம் வரை அதிமுக ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகளும், தொண்டர்களும் அமைதி ஊர்வலம் சென்றனர். வாழப்பாடி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய அதிமுகவினர்.

இதனையடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு, ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பத்மாவதி குமரன், எம்ஜிஆர் பழனிசாமி, செல்லையா, அனிதா பழனிமுத்து, பழனிசாமி, ரஜினி,  குமார்,  பாபு, தர்வேஸ்,  ராமச்சந்திரன் மற்றும் தொண்டர்கள்
மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்தியாவின் இரும்பு மங்கையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தில், அவரது பொற்கால அதிமுக ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்தவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அனைத்து இடங்களையும் கைப்பற்றவும், ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், நகர செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகளும் தொண்டர்களும் இணைந்து பணியாற்றிட உறுதி ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com