புதிதாக 24 உள்நாட்டு விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் முடிவு

நாளை(பிப்.12 ) முதல் புதிதாக 24 உள்ளூர் விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

நாளை(பிப்.12 ) முதல் புதிதாக 24 உள்ளூர் விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதிதாக இயக்கப்படவுள்ள விமானங்கள் பிப்ரவரி 12 முதல் 24 ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்த விமானங்கள் பெரு நகரங்களுக்கும், சிறு நகரங்களுக்கும் இடையேயான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இயக்கப்படவுள்ளது. அதன்படி, அஜ்மீர் - மும்பை மற்றும் அகமதாபாத் - அமிர்தசரஸுடன் இணைக்கும் முதல் மற்றும் ஒரே விமான நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் ஆகும்.

புதிய விமானங்களில் ஜெய்சால்மரை, தில்லி மற்றும் அகமதாபாத்துடன் இணைக்கும் நான்கு புதிய பருவகால விமானங்களும் அடங்கும்.

தவிர, அகமதாபாத் - பெங்களூரு - அகமதாபாத், கொல்கத்தா - குவஹாத்தி மற்றும் குவாஹாட்தி - தில்லி வழித்தடங்களில் தினசரி விமான சேவைகளை தொடங்கவுள்ளது.

பருவகால விமானங்கள் பிப்ரவரி 12 முதல் மார்ச் 13 வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com